ADDED : மே 10, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் பின்புறம், அயோத்தியாப்பட்டணம் - பேளூர் நெடுஞ்சாலையில், நேற்று மாலை, 5:30 மணிக்கு, சந்திரப்பிள்ளைவலசு மக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார், பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், 5:50க்கு மறியலை மக்கள் கைவிட்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறிய
தாவது: தான்தோன்றீஸ்வரர் கோவில் பகுதியில் இருந்து பேளூர் பஸ் ஸ்டாண்ட் வரை, நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி, 3 மாதங்களாக நடக்கிறது. இதனால் இரு மாதங்களுக்கு முன், மேட்டூர் பிரதான குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டு, தண்ணீர் இன்றி சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இனியாவது அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.