/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடிப்படை வசதிக்கு சாலை மறியல் வாபஸ்
/
அடிப்படை வசதிக்கு சாலை மறியல் வாபஸ்
ADDED : ஜன 03, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே பச்சமலை ஊராட்சி உள்ளது. அங்கு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவர், கூடுதல் பஸ் வசதி கேட்டு, பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இன்று சாலை மறியலில் ஈடுபடுவதாக, மலைவாழ் மக்கள் அறிவித்தனர்.
நேற்று கெங்கவல்லி தாசில்தார் பாலகி-ருஷ்ணன் தலைமையில் தம்மம்பட்டி போலீசார், சுகாதாரம், போக்குவரத்து துறை உள்ளிட்ட அலுவலர்கள், மக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது தாசில்தார், 'மருத்துவர் பணியிடம் விரைவில் நிரப்பப்பட உள்ளது. கூடுதல் பஸ் போக்குவரத்து செய்து தரப்படும்' என உறுதி அளித்தார். இதனால் சாலை மறி-யலை, மக்கள் கைவிடுவதாக தெரிவித்தனர்.

