/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழாய் சீரமைப்பதை கண்டித்து சாலை மறியல்
/
குழாய் சீரமைப்பதை கண்டித்து சாலை மறியல்
ADDED : ஜன 10, 2025 07:14 AM
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே, சின்னப்பம்பட்டி - இளம்பிள்ளை பிரதான சாலையில், பனஞ்சாரியில், பிரதான பைப்லைன் உடைப்பை சரிசெய்ய, நீர்வளத்துறை அலுவலர்கள் நேற்று வந்தனர். அப்போது மக்கள், 'இதை சரிசெய்தால், எங்கள் பகுதிக்கு தண்ணீர் வராது' எனக்கூறி, மாலை, 6:00 மணிக்கு, காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரை மணி நேரம் நீடித்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் சரிதா உள்ளிட்ட வருவாய்த்துறையினர், தாரமங்கலம் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது அதிகாரிகள், 'உடைப்பை சரிசெய்யாவிட்டால், மகுடஞ்சாவடிக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிரமம் ஏற்படும். இருப்பினும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறி பணியை நிறுத்தினர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.