/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 ஆண்டில் சீரழிந்த சாலை; தரமற்ற பணியால் அதிருப்தி
/
2 ஆண்டில் சீரழிந்த சாலை; தரமற்ற பணியால் அதிருப்தி
ADDED : டிச 18, 2024 07:13 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் ராஜேஸ்வரி நகர் உள்ளது. அங்கு, 2022ல், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டன. 2021 டிசம்பரில் பணி தொடங்கி, 2022 மார்ச்சில் நிறைவடைந்தது. இரு ஆண்டுகள் முடிந்த நிலையில், பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து சாலை சேதடைந்துள்ளது.
மேற்புறம் இருந்த கான்கிரீட் கலவையை முழுமையாக காணவில்லை. ஜல்லிகள், பாதசாரிகளின் கால் பாதங்களை பதம் பார்க்கின்றன. குறைந்தபட்சம், 5 ஆண்டுகள் இருக்கும்படி சிமென்ட் சாலைகளை அமைக்க வேண்டும். ஒன்றிய அதிகாரிகள் அலட்சியத்தால், 2 ஆண்டில் சாலை சீரழிந்து அரசு நிதி வீணாகி உள்ளது. தரமற்ற முறையில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'சாலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.