ADDED : நவ 04, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில் இருந்து களரம்பட்டி வழியே மல்லுார் செல்லும் சாலையை, தினமும் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர்.
அச்சாலையில் களரம்பட்டி குட்டை முதல் பெரமனுார் மயானம், மல்லுார் குப்பை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் எரியவில்லை. அங்கு, 4 சாலைகள் சந்திக்கும் இடம் இருள் சூழந்து காணப்படுவதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வழிப்பறி சம்பவம் நடக்கும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். விளக்குகளை எரிய வைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.