ADDED : ஆக 27, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்கம் சார்பில், சேலம், ஜங்ஷன் அருகே புதுரோட்டில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நேற்று, மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தினர். மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.அதில் சாலை பணியாளர்களின், 41 மாத பணிக்காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும்.
அதுதொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த, மேல் முறையீடு மனுவை வாபஸ் பெற தமிழக அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மாநில பொதுச் செயலர் விஜயகுமார், கோட்ட செயலர்கள் செந்தில்குமார், ஸ்ரீதர், கோட்ட தலைவர் அரிமயில் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

