/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐ.டி.ஐ., மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
ஐ.டி.ஐ., மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஐ.டி.ஐ., மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஐ.டி.ஐ., மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : ஜன 24, 2024 10:01 AM
சேலம்: கோரிமேடு அரசு ஐ.டி.ஐ., மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
சாலை பாதுகாப்பு வார விழாவை ஒட்டி, அரசு ஐ.டி.ஐ., - கன்னங்குறிச்சி போலீசார், ஜே.சி.ஐ., மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான உலக பேரவை ஆகியன இணைந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை நேற்று கோரிமேடு பகுதியில் மேற்கொண்டனர்.
சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வினியோகித்ததோடு, வாகனங்களின் முகப்பு விளக்குகளில் ஸ்டிக்கர் ஒட்டியும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி பிரசாரம் மேற்கொண்டனர்.
ஐ.டி.ஐ., துணை இயக்குனர் ரவிச்சந்திரன், கன்னங்குறிச்சி எஸ்.ஐ., புவனேஸ்வரி, மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.