/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 21, 2025 07:37 AM
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்ட மோட்டார் பைக் மெக்கானிக் சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, மல்லுாரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். நிர்வாக ஆலோசகர் சம்பத்குமார், மாவட்ட செயலர் குமரவேல், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.
தொடர்ந்து பேரணியை, சேலம் ஊரக டி.எஸ்.பி., தேன்மொழிவேல் தொடங்கி வைத்தார். தபால் நிலையம் வழியே சென்ற பேரணி, அரசு மேல்நிலைப்பள்ளியை அடைந்தது. அதில் ஹெல்மெட் அணிந்து போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, இருசக்கர வாகனங்களை ஓட்ட, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மல்லுார் பகுதி செயலர் முத்துசாமி, துணை செயலர் சுரேஷ்குமார், பொருளாளர் அர்ஜூனமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

