ADDED : அக் 18, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சி, 13வது வார்டு, பழனியாபுரி சாலை, காமராஜர் நகரில் தார்ச்சாலை அமைக்கக்கோரி, மக்கள் கோரிக்கை விடுத்தனர். 2 மாதங்களுக்கு முன், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் சாலை அமைக்கப்பட்டது. தற்போது ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். தரமற்ற நிலையில் சாலை போடப்பட்டுள்ளதாக, மக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து, தி.மு.க.,வை சேர்ந்த, நரசிங்கபுரம் நகராட்சி தலைவர் அலெக்சாண்டர் கூறுகையில், ''நகராட்சியில் பல்வேறு இடங்களில், 1.73 கோடி ரூபாயில், தார்ச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காமராஜர் நகரில் சாலை பெயர்ந்தது குறித்து ஆய்வு செய்து, சீரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.