/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
22ல் ஒப்பாரி போராட்டம் சாலை பணியாளர் முடிவு
/
22ல் ஒப்பாரி போராட்டம் சாலை பணியாளர் முடிவு
ADDED : டிச 14, 2025 05:54 AM
ஓமலுார்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், 9வது மாநில மாநாடு நேற்று முன்தினம் ஓமலுாரில் தொடங்கியது. அதன் நிறைவு நாளான நேற்று, ஆர்.சி.செட்டிப்பட்டியில் இருந்து, குடும்பத்துடன் உறுப்பினர்கள் பேரணி நடந்தது.
முன்னதாக விழா மண்டபத்தில் மாநில பொதுச்செயலர் அம்-சராஜ் அளித்த பேட்டியில், ''நீதிமன்ற உத்தரவுப்படி, 41 மாத கால பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக மாற்றி அறிவித்தல்; கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணியாளர் வேலை வழங்-குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 22ல் தமி-ழகம் முழுதும் கோட்ட பொறியாளர்கள் அலுவலகம் முன், ஒப்-பாரி போராட்டம், தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடக்கின்றன,'' என்றார்.தொடர்ந்து இரவு, ஓமலுார் பஸ் ஸ்டாண்டில், பொது மாநாடு மாநில தலைவர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் சின்னதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

