/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறைவு
/
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறைவு
ADDED : டிச 20, 2024 01:05 AM
வாழப்பாடி, டிச. 20-
வாழப்பாடி அருகே, பேளூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில், நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறைவடைந்தது.
வாழப்பாடி அடுத்த, பேளூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில், நெடுஞ்சாலையை அகலப்படுத்த, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் முதல், கருமந்துறை பிரிவு சாலை வரை, 1 கிலோ மீட்டர் துாரம் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட உள்ளதாக, வீடுகள், கடைகளுக்கு ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, காவல்துறை, நகர்ப்புற வளர்ச்சி துறை, தீயணைப்பு துறை, மின்வாரிய துறையின் அதிகாரிகள் முன்னிலையில், நெடுஞ்சாலையோரம் இருபுறமும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 119 கடைகள், 24 வீடுகள் ஆகியவை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது. இப்பணி நேற்று மாலை, 4:30 மணிக்கு
நிறைவடைந்தது. சில வீடுகள் மற்றும் கடைகள் முழுவதுமாக இடிக்கப்பட்டது.