/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓம் சக்தி நகரில் மீண்டும் திருட்டு
/
ஓம் சக்தி நகரில் மீண்டும் திருட்டு
ADDED : ஜன 19, 2025 01:31 AM
ஓமலுார்: ஓமலுார் அருகே பாகல்பட்டியில் உள்ள ஓம் சக்தி நகர், 'இ' பிளாக்கில் வசிப்பவர் சந்திரன், 60. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். கடந்த, 16ல் கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 17,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. வேறு இடத்தில் வைக்கப்பட்ட, 5 பவுன் தப்பியது. கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஏற்கனவே, ஓம் சக்தி நகரில், கடந்த டிச., 21ல் ஜானகிராமன், பாஸ்கர் வீடுகளில் திருடுபோனது. அதே பகுதியில் மீண்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளதால், போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணியை தீவிரப்படுத்த, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

