/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி
/
தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி
ADDED : ஆக 09, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், சூரமங்கலம், ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் சரச கோபால், 76. தொழில் அதிபரான இவர், ஓமலுார், பாகல்பட்டியில், பால் நிறுவனம் வைத்துள்ளார். இவருக்கு, 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் அமெரிக்காவில் உள்ளார். அவரை பார்க்க, 10 நாட்களுக்கு முன் சரசகோபால், குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை, வேலைக்கார பெண், வீட்டை திறக்க வந்தபோது, பூட்டு, ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்ட நிலையில் இருந்தது.
இதுகுறித்து அவர் தகவல்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். மர்ம நபர்கள், பூட்டை அறுக்க முடியாமல் திரும்பிச்சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.