/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரோபோட்டிக் காட்டு விலங்குகள் அட்டகாசம் வரும் 4ல் நிறைவால் மக்களுக்கு அழைப்பு

ADDED : பிப் 01, 2024 10:21 AM
சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, எம்.கே.சி., என்டர்டெயின்மென்ட் நடத்தும், ரோபோட்டிக் காட்டு விலங்குகளின் அட்டகாசம், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, வரும், 4ல் நிறைவடைய உள்ளது.
இதுகுறித்து, 'எக்ஸ்போ' ஒருங்கிணைப்பாளர்கள் சிட்டிபாபு, கனகராஜ், செந்தில்குமார், பாண்டியராஜன் கூறியதாவது:
சேலத்திலேயே பொருட்காட்சியில் ரோபோட்டிக் சிங்கம், புலி, கரடி, மான், ஒட்டகம், யானை போன்ற காட்டு விலங்குகளின் அட்டகாசம், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மின்விளக்குகளால் ஒளிர வைத்து, செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகபொருட்கள், நுகர்வோர் ஸ்டால், அங்காடி பொருட்களை, 'ஷாப்பிங்' செய்யலாம். பொழுதுபோக்கு பூங்காக்களில் பெரியோர், சிறியோருக்குரிய விளையாட்டுகளாக, பிரத்யேக ராட்டினங்களில் ஏறி விளையாடலாம். உணவு தின்பண்டங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பல்வேறு வகை பொருட்கள் அனைத்தும் ரோபோட்டிக் காட்டு விலங்குகளின் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளதால் தவறாமல் பார்த்து மகிழுங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.