/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
/
மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
ADDED : ஜூன் 17, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே தெசவிளக்கு பகுதியை சேர்ந்தவர் திவ்யபாரதி, 21. பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்துள்ளார். பாப்பம்பாடியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 33, பெயின்டிங் கடையில் வேலை பார்க்கிறார். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள். கடந்த, மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, நேற்று ஓமலுாரில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின், பாதுகாப்பு கேட்டு, ஓமலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர்.