/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அம்மன் கோவிலில் தாலி, பணம் திருடிய ரவுடி கைது
/
அம்மன் கோவிலில் தாலி, பணம் திருடிய ரவுடி கைது
ADDED : ஜூலை 08, 2025 01:44 AM
மேட்டூர், :அம்மன் கோவிலில் நகை, உண்டியலை உடைத்து பணம் திருடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.மேட்டூர் கருமலைக்கூடல், புதுரெட்டியூர் சக்தி மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா குஞ்சிரெட்டி. கடந்த மாதம், 16 காலை, 6:00 மணிக்கு கோவிலுக்கு சென்ற போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த ஒரு கிராம் தாலி மாயமாகி இருந்தது. அருகிலுள்ள முனியப்பன் கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, 15 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது. குஞ்சிரெட்டி கொடுத்த புகார்படி போலீசார் விசாரணை நடத்தி,
ஓமலுார், பாம்பன்கரடு, வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த பிரபாகரன், 40, என்பவரை கைது செய்தனர். இவரது பெயர் கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் உள்ளது.நேற்று கருமலைக்கூடல் போலீசார், பிரபாகரனை கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். உண்டியல் திருடிய பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்