/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சில்லி சிக்கன் 'ஓசி' கேட்டு குண்டு வீசிய ரவுடி கைது
/
சில்லி சிக்கன் 'ஓசி' கேட்டு குண்டு வீசிய ரவுடி கைது
சில்லி சிக்கன் 'ஓசி' கேட்டு குண்டு வீசிய ரவுடி கைது
சில்லி சிக்கன் 'ஓசி' கேட்டு குண்டு வீசிய ரவுடி கைது
ADDED : ஜூலை 20, 2025 02:53 AM
சேலம்,:'ஓசி'யில் சில்லி சிக்கன் தராததால், கடைக்கார பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
சேலம், அழகாபுரம், பெரிய புதுார், அர்த்தனாரி தோட்டம், பாரதியார் தெருவைச் சேர்ந்த கலைமணி மனைவி செல்லக்கிளி, 30. இவர், வீடு முன், சில்லி சிக்கன் கடை வைத்துள்ளார்.
அங்கு, நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, பெரிய புதுார், நந்தவனம் தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 23, கத்தியை காட்டி, 'ஓசி'யில் சில்லி சிக்கன் கேட்டு மிரட்டினார். செல்லக்கிளி தட்டிக்கேட்க வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், 'உங்கள் வீட்டில் பெட்ரோல் பாம் வீசுவேன்' என, கூறினார். தொடர்ந்து பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, அதில் திரி போட்டு, தீயை பற்றவைத்து, வீட்டுக்குள் வீசியுள்ளார். செல்லக்கிளி சாதுரியமாக, கதவை உட்புறம் மூடிக்கொண்டதால், பெட்ரோல் குண்டு விழுந்ததில், கதவு தீப்பற்றி எரிந்தது.
அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. செல்லக்கிளி புகாரின்படி, அழகாபுரம் போலீசார், சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'ஏற்கனவே சந்தோஷ்குமார் மீது வழிப்பறி, கொலை முயற்சி உட்பட, ஏழு வழக்குகள் உள்ளதால், ரவுடி பட்டியலில் உள்ளார்' என்றனர்.