/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகை கடைகள் நடத்தி ரூ.100 கோடி மோசடி : முதன்மை அதிகாரி, மார்க்கெட்டிங் மேலாளர் கைது
/
நகை கடைகள் நடத்தி ரூ.100 கோடி மோசடி : முதன்மை அதிகாரி, மார்க்கெட்டிங் மேலாளர் கைது
நகை கடைகள் நடத்தி ரூ.100 கோடி மோசடி : முதன்மை அதிகாரி, மார்க்கெட்டிங் மேலாளர் கைது
நகை கடைகள் நடத்தி ரூ.100 கோடி மோசடி : முதன்மை அதிகாரி, மார்க்கெட்டிங் மேலாளர் கைது
ADDED : அக் 03, 2024 06:43 AM
சேலம் : நகை கடைகள் நடத்தி, 100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அக்கடைகளுக்கு முதன்மை அதிகாரியாக செயல்பட்டவரையும், மார்க்கெட்டிங் மேலாளரையும் போலீசார் கைது செய்தனர்.
சேலம் அருகே வலசையூரை சேர்ந்தவர் சபரிசங்கர், 40. இவர், 2019ல், அம்மாபேட்டையை தலைமையிடமாக வைத்து, எஸ்.வி.எஸ்., ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் பெயரில் நகைக்கடை தொடங்கினார். தொடர்ந்து சீலநாயக்கன்பட்டி, தாரமங்கலம், ஆத்துார் ஆகிய இடங்களில் அதன் கிளைகளை திறந்தார். நகை சீட்டு, பழைய நகைக்கு புதுசு, முதலீடுக்கு, 2.50 ரூபாய் வட்டி என, பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தார்.
அதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள், நகை கடை திட்டத்தில் இணைந்தனர். அதன்மூலம் வருமானம் கொட்டியதால் தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கிளைகளை திறந்தார். தொடர்ந்து தீபாவளி நகை சீட்டு உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து நகை, பணம் வசூலித்தார். அத்திட்டங்கள் முதிர்வு பெற்ற நிலையில் முதலீட்டாளர்களுக்கு புதுநகைகள், பணம் தராமல், நகை கடைகளை மூடிவிட்டு கவுரிசங்கர், அவருடன் இணைந்து செயல்பட்ட, 4 பேர், கடந்த ஆண்டு நவ., 10ல் தலைமறைவாகினர்.
இதுதொடர்பான புகார், சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவில் இருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. அதில் சேலத்தில் மட்டும், 8 கோடி ரூபாய் மோசடி நடந்தது அம்பலமானது. இதுதொடர்பாக மோசடி, கூட்டு சதி, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் சபரிசங்கர் உள்பட, 5 பேர் மீது கடந்த ஜூன், 14ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீது செப்டம்பர் வரை, 546 பேர் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நகை கடைகளுக்கு முதன்மை அதிகாரியாக செயல்பட்ட, ஆட்டையாம்பட்டி, ராஜூவ் காந்தி நகரை சேர்ந்த முருகன், 38, மார்க்கெட்டிங் மேலாளர் பிரகாஷ், 32, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
2 பேருக்கு வலை
தர்மபுரியில் நடந்த மோசடியில், அந்த மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கடந்த மே மாதம், சபரிசங்கரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழகம் முழுதும், 100 கோடி ரூபாய் மோசடி செய்ததும் அந்த பணத்தில், 'ஜாலி' வாழ்க்கையை அனுபவித்ததும் தெரிந்தது. இவருடன் சேர்த்து இந்த வழக்கில் கைது எண்ணிக்கை, 3 ஆக உயர்ந்தது. நாமக்கல், கரூர், திருச்சி உள்பட, 11 இடங்களில் நடந்த மோசடி தொடர்பாக, அந்தந்த மாவட்ட போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மோசடியில் தலைமறைவாக உள்ள கவீன், அஜித்தை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடுகின்றனர்.