ரூ.10,000, மோதிரம் பறிப்பு மற்றொரு ரவுடி சிக்கினார்
ரூ.10,000, மோதிரம் பறிப்பு மற்றொரு ரவுடி சிக்கினார்
ADDED : நவ 12, 2026 01:42 AM
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்தவர் ஜீவா, 21. கடந்த, 3 இரவு, காந்தி நகர் சுடுகாடு அருகே நடந்து சென்றார்.
அப்போது, 4 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 10,000 ரூபாய், கால் பவுன் மோதிரத்தை பறித்துக்கொண்டு தப்பினர். ஜீவா புகார்படி கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்த ரவுடி சதீஷ், 36, என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி பூபாலன், 37, என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார்.கஞ்சா விற்றவர் கைது
சேலம், நவ. 12
சேலம், அன்னதானப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் மூணாங்கரடில் ரோந்து சென்றனர். சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்ததில், தாதகாப்பட்டியை சேர்ந்த சதீஷ், 30, என தெரிந்தது. அவரை சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் கவரில், 1.5 கிலோ கஞ்சாவை விற்க வைத்திருந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
