/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ்சில் பெண்ணிடம் ரூ.10,000 திருட்டு
/
பஸ்சில் பெண்ணிடம் ரூ.10,000 திருட்டு
ADDED : அக் 24, 2025 01:36 AM
சங்ககிரி ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த யோகஸ்வரன். இவரது மனைவி யோகேஸ்வரி, 31. தம்பதியர், தீபாவளியை ஒட்டி, சேலத்தில் உள்ள யோகேஸ்வரியின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். மீண்டும் குழந்தைகளுடன் நேற்று வீட்டுக்கு, பவானி வழியே திருப்பூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறி பயணித்தனர். யோகேஸ்வரி அருகே ஒரு பெண் அமர்ந்திருந்தார்.
மதியம், 12:30 மணிக்கு சங்ககிரி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள ஸ்டாப்பில் பஸ் நின்றபோது, யோகேஸ்வரி கைப்பையில் இருந்த, 10,000 ரூபாய் காணாமல் போனது தெரிந்தது. அவர் சத்தம்போட, அருகே இருந்த போலீசார் விசாரித்ததில், யோகேஸ்வரி அருகே அமர்ந்திருந்த பெண், பணத்தை திருடிச்சென்றதாக கூறினார். தொடர்ந்து யோகஸ்வரி புகார்படி, சங்ககிரி போலீசார் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

