sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.13 கோடி, 2.5 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி தொண்டு நிறுவனத்தில் நடந்த சோதனையில் சிக்கியது

/

ரூ.13 கோடி, 2.5 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி தொண்டு நிறுவனத்தில் நடந்த சோதனையில் சிக்கியது

ரூ.13 கோடி, 2.5 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி தொண்டு நிறுவனத்தில் நடந்த சோதனையில் சிக்கியது

ரூ.13 கோடி, 2.5 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி தொண்டு நிறுவனத்தில் நடந்த சோதனையில் சிக்கியது


ADDED : ஜன 25, 2025 01:46 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி, இரட்டிப்பு பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தொண்டு நிறுவனம் நடத்தி வந்த இடத்தில் விடிய விடிய போலீசார் நடத்திய சோதனையில், ரொக்க பணம் 13 கோடி ரூபாய், 2.5 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளியை கைப்பற்றினர்.

சேலம், அம்மாப்பேட்டை சிவகாமி திருமண மண்டபத்தில், வேலுாரைச் சேர்ந்த விஜய பானு, 48, இரு ஆண்டுகளாக அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில், தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

சிறைபிடிப்பு


அறக்கட்டளை மூலமாக கூடை பின்னுதல், மெழுகுவர்த்தி தயாரித்தல் உள்ளிட்ட பலவகையான இலவச வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவகமும் நடத்தி வந்தனர்.

அறக்கட்டளையில், 5,000 ரூபாய் முதலீடு செய்தால், 11 மாதங்கள் வரை மாதந்தோறும், 1,000 ரூபாய் தரப்படும் என்றும், 50,000 முதலீடு செய்தால், 7 மாதத்திற்கு தலா, 15,000 ரூபாய் வழங்கப்படும் என, கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து பணம் வசூலிக்கப்பட்டது.

இதை நம்பி அம்மாப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்டோர் தாங்கள் விரும்பிய திட்டத்தில் முதலீடு செய்தனர்.

தகவலறிந்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சிறப்பு எஸ்.ஐ., ஒருவரை அனுப்பி, திட்டத்தில் சேர்ந்து முதலீட்டாளர் போல அவர் இருந்து வந்துள்ளார்.

சில மாதங்களாக, அங்கு நடக்கும் பணப்பரிவர்த்தனைகள் குறித்து அறிக்கை தயார் செய்து சமர்ப்பித்தார். பொங்கல் பண்டிகையின் போது ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் அதிரடி சலுகையாக, 1 லட்சம் முதலீடு செய்தால், ஏழாவது மாதத்தில், 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, தொண்டு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதையறிந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மண்டபத்தில் நுழைந்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த மக்கள், போலீசாரை சிறை பிடித்தனர்.

அறக்கட்டளையில் முதலீடு செய்தவர்களுக்கு, இதுவரை தவறாமல் தவணை தொகை வழங்கப்படுகிறது. எனவே, விசாரிக்க வேண்டாம் என, மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மக்களை கட்டுப்படுத்த மாநகர போலீசார் நுாற்றுக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.

அறக்கட்டளை நிர்வாகிகள் வேலுாரை சேர்ந்த விஜய பானு, அவரது உதவியாளர் ஜெயப்பிரதா, 47, சேலம் மேலாளர் பாஸ்கர், 49, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

நீதிமன்ற அனுமதி பெற்று, மண்டபத்தில் வசூலித்து வைத்திருந்த பணத்தை விடிய விடிய எண்ணினர். தங்கம், வெள்ளி பொருட்களையும் கணக்கிட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்


இதில், 13 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 2.5 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி பொருட்கள், 200 மூட்டை அரிசி, 300 மூட்டை மளிகை பொருட்கள் இருந்தன. அனைத்தையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

அங்கீகாரம் இல்லாத திட்டத்தில், முறைகேடாக மக்கள் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக விஜய பானு, ஜெயப்பிரதா, பாஸ்கர் ஆகியோரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஆரம்பத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது போலவும், பின் மக்களிடம் நல்ல முறையில் பழகி, இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, முதலீடு திரட்டியதும் தெரிந்தது.

ஒரு கட்டத்தில், மூன்று மடங்கு அளவு முதலீடு பணம் திரும்ப தருவதாக கூறிகோடிக்கணக்கில் வசூலித்துள்ளதும் தெரிந்தது.

கைது செய்யப்பட்ட மூவரையும், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நேற்று போலீசார் அழைத்து சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரித்தால், மொத்தம் எவ்வளவு ரூபாய் மோசடி செய்துள்ளனர் என தெரியவரும்.

மதம் மாற்றம்


அறக்கட்டளையில் உள்ள செந்தில்குமார் என்பவர் பாதிரியார். இவர் இங்கு வரும் முதலீட்டாளர்களை மூளைச்சலவை செய்து, 'கிறிஸ்தவராக மாறுங்கள்; உங்களுக்கு பல நன்மைகள், பல விஷயங்கள் கிடைக்கும்' எனக்கூறி, பல பேரை மதமாற்றம் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிந்துள்ளது. செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us