ADDED : டிச 25, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.2.30 லட்சம் காணிக்கை
வீரபாண்டி, டிச. 25-
சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரார்த்தனை, அன்னதானம் என, இரு வித உண்டியல்கள் உள்ளன. அவற்றில் பக்தர்கள், காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அதில், பிரார்த்தனை உண்டியல் நேற்று திறக்கப்பட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் பத்மா, தக்கார் கோகிலா முன்னிலையில், பக்தர்களால் எண்ணப்பட்டன. அதில், 2,30,778 ரூபாய் இருந்தது. செயல் அலுவலர் சோழமாதேவி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

