/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயன்பாட்டுக்கே வராத ஆடு அடிக்கும் தொட்டிபுனரமைப்பு பணியால் ரூ.24 லட்சம் வீண்

ADDED : ஜன 05, 2025 01:57 AM
கிருஷ்ணகிரி :காவேரிப்பட்டணத்தில் பயன்பாட்டுக்கே வராத ஆடு அடிக்கும் தொட்டி மையம், 24 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அரசால் துவக்கி வைக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படாமல் முடங்கியும், மூடப்பட்டும் உள்ளன. உழவர் சந்தை, சமுதாயகூடம் உள்ளிட்டவைகளின் வரிசையில் கடந்த, 2013 டிச.,30ல் துவங்கப்பட்ட காவேரிப்பட்டணம் ஆடு அடிக்கும் தொட்டியும் உள்ளது. காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதியில் ஆடு அடிக்கும் தொட்டி திறக்கப்பட்டு சில வாரங்கள் கூட இயங்கவில்லை. காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் தற்போது, 20க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இவையனைத்தும் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. சாலையோரத்திலேயே ஆடுகளை அறுத்து கழிவுகளையும் அங்கேயே கொட்டுகின்றனர். ஆடு அடிக்கும் தொட்டி இருந்தும் அதை யாரும் பயன்படுத்துவதில்லை. இந்நிலை யில், கடந்த, 11 ஆண்டு களாக மூடப்பட்டிருக்கும் ஆடு அடிக்கும் தொட்டியை, 24 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைத்த டவுன் பஞ்., நிர்வாகம் மீண்டும் பூட்டி வைத்துள்ளது.
வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் நிதியை இப்படி தேவையின்றி செலவு செய்வதால், மக்கள் வரி பணம் வீணாகிறது.