/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆசிரியர் வீட்டில் ரூ.25,000 திருட்டு
/
ஆசிரியர் வீட்டில் ரூ.25,000 திருட்டு
ADDED : நவ 02, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், வலசையூர், தேவாங்கர் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, டியூசன் நடத்துகிறார். நேற்று முன்தினம் டியூசன் கட்டடத்தில் விக்னேஷ் துாங்கியுள்ளார்.
அவரது தாய் சுமதி, வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை சுமதி வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 25,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து விக்னேஷ் புகார்படி, வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

