ADDED : டிச 23, 2024 10:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், சீலநாயக்கன்பட்டி, தலை மாலை நகரை சேர்ந்தவர் குமார், 37. சீலநாயக்கன்பட்டி அருகே கார் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார்.கடந்த, 20 இரவு, சென்டரை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த, 28,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடிசென்றது தெரிந்தது. அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.