sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ. 28.33 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கல்

/

ரூ. 28.33 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கல்

ரூ. 28.33 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கல்

ரூ. 28.33 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கல்


ADDED : டிச 03, 2024 06:58 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தை-யொட்டி, உறுதிமொழி

ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் பிருந்தாதேவி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர்

அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம், திரு-வள்ளுவர் சிலை, மாநகராட்சி

அலுவலகம் வழியாக சென்று அரசு மருத்துவமனையை அடைந்தது. கல்லுாரி

மாணவ,மாண-வியர் பங்கேற்றனர். அதன்பின் கலெக்டர் கூறியதாவது:தாய்-சேய் மேவா திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களை புதிய கூட்டுமருந்து

சிகிச்சைக்கு உட்படுத்தி, தொற்று இல்லாத குழந்-தைபெற நடவடிக்கை

எடுக்கப்பட்டுள்ளது. சுகவாழ்வு மையங்கள் மூலம், பால்வினை பரிசோதனை,

சிகிச்சை அளிக்கப்-பட்டு வருகிறது. எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தனியார்

கல்லுாரிகள் மூலம், 2011 முதல், உயர்கல்வி இலவசமாக வழங்கப்பட்டு

வருகிறது. மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் அறக்கட்டளை வாயிலாக,

2023-24ல், கல்வி உதவித்தொகையாக, 28.33 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இம்மாதம் முழுவதும், 20 வட்டாரம், 14 வட்டங்களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பற்றி

பல்-வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இவ்வாறு கூறினார்.தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், கண்காட்சி நடந்தது.






      Dinamalar
      Follow us