/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ. 3 லட்சம் மோசடி வாலிபருக்கு காப்பு
/
ரூ. 3 லட்சம் மோசடி வாலிபருக்கு காப்பு
ADDED : ஜன 21, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன், 30. இவர், கொண்டலாம்பட்டியில் காபி ஷாப் நடத்தி வருகிறார். இவரது தாயுடன், பட்டை கோவில் பகுதியை சேர்ந்த தீபக், 45, என்பவர் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது, பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, தீபக் நாகராஜன் தாயிடம் இருந்து, 2021ல், பல்-வேறு தவணைகளில் மூன்று லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பின்னர் பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து, கொண்டலாம்பட்டி
போலீசில் நாகராஜன் அளித்த புகார்படி, வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் தீபக்கை கைது செய்தனர்.

