/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.42 லட்சம் காணிக்கை
/
பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.42 லட்சம் காணிக்கை
ADDED : ஜூன் 07, 2025 01:14 AM
மேட்டூர் :மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை பணம் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது.மேச்சேரியில், பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. மாதம்தோறும் அமாவாசை நாட்களில், வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர், தங்கள் வேண்டுதல் நிறைவேற உண்டியலில் காணிக்கை செலுத்துவர். இந்நிலையில் நேற்று முன்தினம். அறநிலையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு, ஆய்வாளர் சங்கர்கணேஷ், செயல் அலுவலர் சுதா முன்னிலையில் கல்லுாரி மாணவ, மாணவியர் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணினர்.மொத்தம், 42 லட்சத்து, 83 ஆயிரத்து, 297 ரூபாய், 114 கிராம் தங்கம், 85 கிராம் வெள்ளி இருந்தது.