ADDED : செப் 26, 2026 03:48 AM

அ நிறம் | அளவு
சேலம்: பட்டா மாற்ற, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற சார்பு நில அளவையர் முருகேசன், 37, கைது செய்யப்பட்டார்.
சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கதிரவன். இவர், தந்தை பெயரில் உள்ள வீட்டை, தன் பெயருக்கு பட்டா மாற்ற, அம்மாபேட்டை நில அளவைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு, சார்பு நில அளவையர் முருகேசன், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து கதிரவன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய, 5,000 ரூபாயை, கதிரவன் வழங்கியபோது, சார்பு நில அளவையர் முருகேசன், இடைத்தரகர் பூவரசன், 27, ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
