/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தி.மு.க., ஆட்சியில் நெசவாளர்களுக்கு ரூ.686 கோடி ஊக்கத்தொகை வழங்கல்'

ADDED : ஆக 08, 2025 01:27 AM
ஓமலுார், சுதேசி இயக்கத்தின் நினைவாக, ஆக., 7ல், தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே வனவாசியில், 11வது தேசிய கைத்தறி தின கண்காட்சி, சிறப்பு விற்பனையை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
பட்டுப்புடவை, வேட்டிகள் உள்ளிட்ட ஜவுளி ரகங்களை பார்வையிட்ட அவர், 100க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு, 96 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகை, அதிநவீன கைத்தறி உபகரணங்களை வழங்கி பேசியதாவது:
கடந்த, 4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில், கைத்தறி நெசவாளர்களுக்கு, 686 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற பொற்காலத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. மின்னணு ஏற்றுமதி, ஜவுளி ஏற்றுமதி, உயர்கல்வித்துறை, தொழில் தொடங்க சிறந்த இடம் ஆகியவற்றில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி, கலெக்டர் பிருந்தாதேவி, நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.