/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1,280 சிறுபான்மையினருக்கு ரூ.7.61 கோடி கடனுதவி
/
1,280 சிறுபான்மையினருக்கு ரூ.7.61 கோடி கடனுதவி
ADDED : ஏப் 24, 2025 01:14 AM
சேலம்:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாடு கழக கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். அதில், 'டாம்கோ' தலைவர் பெர்னாண்டஸ் ரத்தின ராஜா தலைமை வகித்து பேசியதாவது:
பொருளாதாரத்தில் பின் தங்கிய இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மத்தினர், சீக்கியர், பார்சியர், ஜெயின் பிரிவை சேர்ந்த மத வழி சிறுபான்மையினர் உள்ளனர். இந்த மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும்படி தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கு சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி உள்ளிட்ட கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் கடந்த, 4 ஆண்டுகளில், 'டாம்கோ' மூலம், 1,280 பயனாளிகளுக்கு, 7.61 கோடி ரூபாய் தனிநபர், சுய உதவிகளுக்கான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை சிறுபான்மையின மக்கள் பயன்படுத்தி, வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., ரவிக்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில் அரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.