/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'டாப் 10' நாடுகளுக்கான ஆயத்த ஆடை ாதங்களில் ரூ.83,681 கோடி ஏற்றுமதி
/
'டாப் 10' நாடுகளுக்கான ஆயத்த ஆடை ாதங்களில் ரூ.83,681 கோடி ஏற்றுமதி
'டாப் 10' நாடுகளுக்கான ஆயத்த ஆடை ாதங்களில் ரூ.83,681 கோடி ஏற்றுமதி
'டாப் 10' நாடுகளுக்கான ஆயத்த ஆடை ாதங்களில் ரூ.83,681 கோடி ஏற்றுமதி
ADDED : ஜன 21, 2025 06:57 AM
திருப்பூர்: இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 'டாப் 10' நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி, ஏப்., முதல் நவ., வரையிலான, எட்டு மாதங்-களில், 83,681 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஜவுளி பொருட்களில், ஆயத்த ஆடைகள் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. நடப்பு நிதி-யாண்டில், ஏப்., முதல் நவ., வரையிலான எட்டு மாதங்களில், 'டாப் 10' நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி, 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.முந்தைய ஆண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்-டத்தில், 74,234 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இந்-தாண்டு அதே காலகட்டத்தில், 83,681 கோடியாக உயர்ந்துள்ளது. 'டாப் 10' நாடுகள் பட்டியலில்,
28,233 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்து, அமெரிக்கா முதலிடத்-தில் இருக்கிறது. நெதர்லாந்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி-யில், 33.60 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில், ஏப்ரல், முதல் நவம்பர் வரையிலான கால-கட்டத்தில், 3,025 கோடி ரூபாயாக இருந்த இந்நாட்டுக்கான ஏற்று-மதி, இந்தாண்டின் இதே காலகட்டத்தில் 4,089 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அடுத்ததாக ஸ்பெயினுக்கான ஏற்றுமதியும், 20.70 சதவீதம் அதிக-ரித்துள்ளது; நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் 3,491 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொண்ட வளர்ந்த நாடுகள், 'சீனா ஒன் பிளஸ்' என்ற அடிப்படையில், இந்தியாவுடன்
வர்த்தகம் செய்ய விரும்புகின்-றன. 'அதன்படி, புதிய வர்த்தக வாய்ப்பு அதிகரித்துள்ளது. சில நாடுகள் நீங்கலாக, பெரும்பாலான நாடுகளுடன், ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு அதி-கம் உள்ளது' என்றனர்.