/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.32 லட்சம் மோசடி புகார் சார் - பதிவாளர் மீது வழக்கு
/
ரூ.32 லட்சம் மோசடி புகார் சார் - பதிவாளர் மீது வழக்கு
ரூ.32 லட்சம் மோசடி புகார் சார் - பதிவாளர் மீது வழக்கு
ரூ.32 லட்சம் மோசடி புகார் சார் - பதிவாளர் மீது வழக்கு
ADDED : பிப் 10, 2024 08:24 PM
சேலம்:சேலம் மாவட்டம், ஏற்காடு, தாம்சன் சாலையை சேர்ந்தவர் சீனிவாசன்; ஏற்காடு தனியார் பள்ளி ஆசிரியர். இவர், சேலம் மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார் மனு:
கூட்டுறவு துறையில் சார் - பதிவாளராக பணிபுரியும் பிரேமா, உறவினர் வாயிலாக பழக்கமானார். அவர், சேலத்தில் புது வீடு வாங்கிக்கொள்ள வங்கி கடன் வசதி செய்து தருவதாக கூறினார்.
அவர், சூரமங்கலத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் வாயிலாக வீடு பார்க்க செய்தார். தொடர்ந்து, அன்பரசன், முத்து, அமிர்தராஜ், நீலமேகம், மேகநாதன் ஆகியோருடன், வீட்டை, 1 கோடி ரூபாய்க்கு விலை பேசி, முன்பணம், 32.14 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டார்.
ஆனால், அந்த வீட்டை என் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து தராமல், வங்கி கடனும் ஏற்பாடு செய்து தராமல் பணத்தை ஏமாற்றிவிட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.
போலீசார் விசாரித்து, சார் - பதிவாளர் பிரேமா உட்பட ஏழு பேர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர்.