/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.41 லட்சம் முறைகேடு? தாசில்தார் விசாரணை
/
ரூ.41 லட்சம் முறைகேடு? தாசில்தார் விசாரணை
ADDED : ஜன 04, 2025 02:50 AM
பனமரத்துப்பட்டி, ஜன. 4-
பனமரத்துப்பட்டி, அமானிகொண்டலாம்பட்டி ஊராட்சியில், 2023 - 2024ல் குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல், குடிநீர் குழாய் பராமரித்தல், தெருவிளக்கு உதிரி பாகம் வாங்கியது, பாறையை உடைத்து குடிநீர் குழாய் அமைத்தல், சாக்கடை சுத்தம் செய்தல், மின் மோட்டார் பழுது நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டதில், விதிமீறல் நடந்துள்ளது. அதன் மூலம், 41 லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார்
எழுந்தது.
இதையடுத்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, ஊராட்சி கூட்டத்தை கூட்டி, விசாரித்து அறிக்கை அளிக்க, சேலம் தெற்கு தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை 11:30 மணிக்கு, சேலம் தெற்கு தாசில்தார் செல்வராஜ், ஊராட்சி கூட்டத்தை கூட்டினார். தலைவர் உள்ளிட்ட, 14 உறுப்பினர்கள் பங்கேற்றனர். முறைகேடு புகார் குறித்து விசாரணை நடந்தது. தலைவர், உறுப்பினர்கள், விளக்கத்தை எழுதி கொடுத்தனர்.

