/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மனைவியிடம் ரூ.4.85 லட்சம் மோசடி; கணவர் மீது வழக்கு
/
மனைவியிடம் ரூ.4.85 லட்சம் மோசடி; கணவர் மீது வழக்கு
மனைவியிடம் ரூ.4.85 லட்சம் மோசடி; கணவர் மீது வழக்கு
மனைவியிடம் ரூ.4.85 லட்சம் மோசடி; கணவர் மீது வழக்கு
ADDED : பிப் 11, 2025 07:30 AM
சேலம்: சேலம், எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர், 43. உணவு பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதவல்லி, 42. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கருத்து
வேறுபாடு காரணமாக கணவன், மனைவி தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு
சொந்தமான வீட்டை, 39 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.இந்த பணத்தில் ஒரு பகுதியை,
அமுதவல்லி வங்கி கணக்கில் வைத்-துள்ளார். அதில் நான்கு லட்சத்து, 85 ஆயிரத்தை கடந்தாண்டு
ஜூலை, 10ல், அமுதவல்லி வங்கி கணக்கில் இருந்து, தனது வங்கி கணக்கிற்கு பாஸ்கர் மாற்றிக்கொண்டார். அந்த பணத்தை
பலமுறை கேட்டும் திருப்பி தரவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இது
குறித்து, அமுதவல்லி கிச்சிப்பாளையம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். பாஸ்கர் மீது
போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

