/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.6,000 கருணை ஓய்வூதியம்: ஓய்வு பெற்றோர் வலியுறுத்தல்
/
ரூ.6,000 கருணை ஓய்வூதியம்: ஓய்வு பெற்றோர் வலியுறுத்தல்
ரூ.6,000 கருணை ஓய்வூதியம்: ஓய்வு பெற்றோர் வலியுறுத்தல்
ரூ.6,000 கருணை ஓய்வூதியம்: ஓய்வு பெற்றோர் வலியுறுத்தல்
ADDED : செப் 29, 2024 01:37 AM
ரூ.6,000 கருணை ஓய்வூதியம்: ஓய்வு பெற்றோர் வலியுறுத்தல்
சேலம், செப். 29-
தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர் நலச்சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட தலைவர் செங்கான் தலைமை வகித்தார். அதில் கருணை
ஓய்வூதியம், 1,000 ரூபாயை, 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்குதல்; குடும்ப வாரிசுக்கு, 50 சதவீத கருணை ஓய்வூதியம் தேவை; குழு காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி அதில் 50 சதவீதம் பணியாளரும், மீதி அந்தந்த சங்கமும் வழங்க நடவடிக்கை எடுத்தல்; ஓய்வுக்கு பின் அடுத்த சங்கத்தில் பணிபுரிவோருக்கு வழங்கும், 10,000 ரூபாயை, 15,000 ரூபாயாக வழங்குதல்; மாவட்ட அளவில் சேமிப்பு கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச்செயலர்
சின்னதம்பி, தலைவர் சீனன்,
தமிழகம் முழுதும் இருந்து ஓய்வு பெற்றோர் பங்கேற்றனர்.