/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மலைப்பாதையில் ரூ.10 கோடி மதிப்பில் ரப்பர் ரோலர் காஸ் தடுப்பு பணி துவக்கம்

ADDED : டிச 31, 2024 07:38 AM
ஏற்காடு: ஏற்காட்டிற்கு, சேலத்தில் இருந்து செல்ல கொண்டப்ப நாயக்கன்பட்டி வழியாக ஒரு மலைப்பாதை, குப்பனுார் வழியாக ஒரு மலைப்பாதை உள்ளது.
அதிகளவில் பயன்படுத்தும் கொண்டப்ப நாயக்கன்பட்டி மலைப்பாதையில், 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதையின் சாலையோரத்தில் உள்ள, சுவர்களில் வாகனங்கள் மோதி பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து விபத்தை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலை துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில், ஏற்காடு பிரதான மலைப்பாதை, குப்பனுார் மலைப்பாதையில் ரப்பர் ரோலர் காஸ் பேரிகார்ட் அமைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக செல்லும் வாகனங்கள், ரப்பர் ரோலர் காஸ் பேரிகார்ட் மீது மோதும்போது, வாகனத்தை பள்ளத்தில் விளாதபடி தடுத்து நிறுத்தி, சாலை புறமே திருப்பிவிடும் பணியை செய்யும். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்படும். இதனால் வாகனங்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.