/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊரக வளர்ச்சி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 25, 2025 01:38 AM
சேலம்:சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கம் சார்பில், சேலம், கோட்டை மைாதனத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் கோவிந்தன் தலைமை வகித்தார். அதில் சி.ஐ.டி.யு., துணை தலைவர் தியாகராஜன் பேசுகையில், ''நகராட்சி, உள்ளாட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர், டிரைவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, 8 மணி நேரத்தை விட கூடுதல் நேரம் பணி செய்ய நிர்பந்திக்கின்றனர்.
துாய்மை பணியாளர்களுக்கு காலணி, கையுறை, சீருடை, சோப்பு வழங்கப்படுவதில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசின் குறைந்தபட்ச ஊதிய அரசாணை, 62ஐ அமல்படுத்த வேண்டும்,'' என்றார். தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பலரும் கோஷம் எழுப்பினர்.

