/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 30, 2025 02:27 AM
சேலம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில், 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.
அதில் துாய்மை காவலர்களுக்கு, 10,000 ரூபாய் ஊதியம் வழங்குதல்; மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வேண்டும்; ஊராட்சி செயலர்களை, அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து பதிவறை எழுத்தருக்கான அனைத்து சலுகைகளையும் வழங்க கோருதல்; 100 நாள் வேலை திட்ட கணினி ஆப்பரேட்டர்களை பணி நிரந்தப்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட, 6 அமைப்புகளை சேர்ந்த, 8 நிலையிலான ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

