sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செப்டம்பரில் சபரி எக்ஸ்பிரஸ் 'சூப்பர் பாஸ்ட்' ரயிலாக மாற்றம்

/

செப்டம்பரில் சபரி எக்ஸ்பிரஸ் 'சூப்பர் பாஸ்ட்' ரயிலாக மாற்றம்

செப்டம்பரில் சபரி எக்ஸ்பிரஸ் 'சூப்பர் பாஸ்ட்' ரயிலாக மாற்றம்

செப்டம்பரில் சபரி எக்ஸ்பிரஸ் 'சூப்பர் பாஸ்ட்' ரயிலாக மாற்றம்


ADDED : ஜூலை 24, 2025 02:08 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், திருவனந்தபுரம் - செகந்திராபாத் இடையே இயக்கப்படும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில், தினமும் காலை, 6:45க்கு புறப்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே அடுத்தநாள் மதியம், 12:45க்கு செகந்திராபாத்தை அடைகிறது. இந்த ரயில், செப்., 29 முதல், 'சூப்பர் பாஸ்ட்' எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட உள்ளது.

இதன்மூலம், '17229' என்ற வண்டி எண், '20630' ஆக மாற்றப்படும். இதன்படி காலை, 6:45க்கு கிளம்பி, மறுநாள் காலை, 11:00 மணிக்கு செகந்திராபாத்தை அடையும். இதனால், ஒரு மணி, 45 நிமிட பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மாலை, 6:37க்கு சேலம் வரும் சபரி எக்ஸ்பிரஸ், செப்., 29 முதல், மாலை, 6:18க்கு வந்து செல்லும்.

மறுமார்க்க ரயில், செகந்திராபாத்தில் தினமும் மதியம், 12:20க்கு புறப்பட்டு, அடுத்தநாள் மாலை, 6:05க்கு திருவனந்தபுரத்தை அடைகிறது. ஆனால் செப்., 27 முதல், மதியம், 2:25க்கு கிளம்பி, மறுநாள் மாலை, 6:20க்கு திருவனந்தபுரத்தை அடையும். இந்த ரயில் எண், '17230' என்பதில் இருந்து, '20629' ஆக மாற்றப்படும். இதுதவிர தன்பாத் - ஆலப்புழா; மங்களூரு - தாம்பரம்; லோகமான்ய திலக் - திருவனந்தபுரம் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம், செப்., 29 முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us