/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பருவ மழை காலங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு
/
பருவ மழை காலங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : அக் 30, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், கெங்கவல்லி தீயணைப்பு நிலையம் சார்பில், பருவ மழை காலங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு, செயல்விளக்க கூட்டம், ஆத்துார், புங்கவாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை, சிறப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன், பருவ மழை கால பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை, மின் கசிவு உள்ளிட்ட வேறு காரணங்களில் தீப்பிடித்தல், தீ அணைத்தல் குறித்து எடுத்துரைத்தனர்.

