/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூத்த குடிமக்களுக்கு கலெக்டர் கவுரவிப்பு
/
மூத்த குடிமக்களுக்கு கலெக்டர் கவுரவிப்பு
ADDED : அக் 30, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சர்வதேச முதியோர் தினத்தை ஒட்டி, சேலம், ஏற்காடு அடிவாரத்தில் உள்ள 'நேசக்கரங்கள்' ஆதரவு முதியோர் இல்லத்தில், மூத்த குடிமக்களுக்கு கலெக்டர் பிருந்தாதேவி, பொன்னாடை போர்த்தி கிரீடம் அணிவித்து கவுரவித்தார்.
தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், ''மூத்த குடிமக்கள் மீதான அன்பு, மரியாதையை வெளிப்படுத்தும் நாள். மூத்தவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது, இளைய தலைமுறையினருடன் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது தான், இத்தினத்தின் முக்கிய நோக்கம்,'' என்றார்.
சேலம் ஆர்.டி.ஓ., உதயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, நேசக்கரங்கள் இல்ல தலைவர் செல்லதுரை உள்பட பலர்
பங்கேற்றனர்.

