/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சக்தி மாரியம்மன் தேர் திருவிழா கோலாகலம்
/
சக்தி மாரியம்மன் தேர் திருவிழா கோலாகலம்
ADDED : மே 16, 2025 01:46 AM
பெத்தநாயக்கன்பாளையம், த்தநாயக்கன்பாளையம், இடையப்பட்டியில் மாயவ பெருமாள், மகா சக்தி மாரியம்மன் தேர் திருவிழா, கடந்த, 2ல் கொடியேற்றுதலுடன் தொடங்கியது. 7ல் மாரியம்மன் கோவிலில் இருந்து மாயவ பெருமாள் கோவிலுக்கு பொங்கல் கூடை எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடந்தது. 8ல் பெருமாள் திருத்தேர், வில்வனுார், இடையப்பட்டி கிராமங்களில் வீதி உலா நடந்தது.
தொடர்ந்து சக்தி மாரியம்மனுக்கு சக்தி அழைத்தல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 13ல் தேவராட்டம், ஊரணி பொங்கல் நடந்தது. நேற்று முன்தினம் மாரியம்மன் தேர் ரதம் ஏறுதல், பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடுதல், கிடா வெட்டுதல், அழகு குத்துதல், அக்னி கரகம், பூங்கரகம் அழைத்து வருதல், தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று மதியம், 1:00 மணிக்கு, மகா சக்தி மாரியம்மன் தேர் உலா வருதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியே இழுத்து வந்து, மீண்டும் மாரியம்மன் கோவில் முன் நிலை நிறுத்தினர்.
அதேபோல் சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோவில் சித்திரை தேரோட்டத்தின், 14ம் நாளான நேற்று, கற்பக விருட்சம் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், சங்ககிரி நகர் பகுதிகளில் பெருமாள் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அலகு குத்தும் விழா
கெங்கவல்லி அருகே நடுவலுார் புத்து மாரியம்மன் கோவிலில், கடந்த, 9ல், காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. நேற்று பொங்கல் வைத்து அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.