/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலைவாசல் வட்டாரத்தில் 7,482 கிலோ விதை விற்க தடை
/
தலைவாசல் வட்டாரத்தில் 7,482 கிலோ விதை விற்க தடை
ADDED : ஜூலை 24, 2025 01:45 AM
சேலம்,தலைவாசல் வட்டாரத்தில், தனியார், கூட்டுறவுத்துறைக்கு சொந்தமாக, 92 விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. அதில் மொத்த விற்பனை நிலையங்கள், 6ல், விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தலைமையில் குழுவினர், ஆடி பட்ட விதைகளின் முளைப்புத்திறன் அறிக்கை, பதிவுச்சான்று, இருப்பு பதிவு, விபர பலகை பராமரித்தல், விலை பட்டியல் தொடர்பான சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக முளைப்புத்திறன் குறைவு உள்பட தரமற்ற விதைகள், 7,482 கிலோ கண்டறியப்பட்டு, விற்க தடை விதிக்கப்பட்டது. அதன் மதிப்பு, 33 லட்சம் ரூபாய்.
இதுகுறித்து சித்ரா கூறுகையில், ''தரமான விதைகளை விற்பதோடு, விற்கும் விதைகளுக்கு முளைப்புத்திறன் அறிக்கை, பதிவுச்சான்று வைத்திருக்க வேண்டும். இருப்பு பதிவேட்டை முறையாக பராமரிப்பதோடு, விவசாயிகளுக்கு விற்பனை பட்டியல் வழங்க வேண்டும். பட்டியலில் விவசாயி பெயர், முகவரி, கையொப்பம் அவசியம். விவசாயிகள், விலைப்பட்டியலை கேட்டு பெற வேண்டும். அதில் குவியல் எண், காலாவதி நாள் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்,''
என்றார்.