/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேண்டுதல் வைத்து வழிபட களிமண் பொம்மை விற்பனை
/
வேண்டுதல் வைத்து வழிபட களிமண் பொம்மை விற்பனை
ADDED : ஜன 13, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மாட்டு பொங்கலில், விவசாயிகள் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து பொங்கல் வைப்பர். வீட்டில் இறந்த முன்னோர் படத்தை வைத்தும் வழிபடுவர்.
விவசாயிகள் பலர், மாடுகள் நோயால் பாதிக்கப்பட்டதால், அது-போன்று களிமண் பொம்மை செய்து, முனியப்பன் கோவிலில் வைப்பதாக வேண்டிக்கொள்வர். அந்த வேண்டுதலை நிறை-வேற்ற, களிமண்ணில் செய்த சிறு மாட்டு பொம்மைகளை, கோவிலில் வைத்து விட்டு வழிபட்டு செல்வர். வரும், 15ல் மாட்டுப்பொங்கலால், நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்துார் பகுதிகளில் களிமண்ணில் செய்த மாடு, ஆடு, நாய், கோழி பொம்மைகள் மற்றும் மண் பானைகளை வியாபாரிகள் ஆங்காங்கே விற்பனைக்கு வைத்திருந்தனர்.