ADDED : நவ 03, 2024 02:37 AM
இடைப்பாடி: கொங்கணாபுரம் வாரச்சந்தை நேற்று கூடியது. அதில் ஏராள-மானோர் ஆடுகளை கொண்டு வந்தனர். அதற்கேற்ப வியாபா-ரிகள் குவிந்தனர். அதில், 10 கிலோ ஆடு, 6,600 முதல், 7,100 ரூபாய் வரை விலைபோனது. 3,700 ஆடுகள் மூலம், 2.70 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆடு வியாபாரிகள் சங்கத்தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''தீபாவளி முடிந்ததால், சந்தைக்கு கடந்த வாரத்தை விட, இந்த வாரம் ஆடுகள் வரத்து சற்று குறைவாகவே இருந்தது. விற்பனையும் கடந்த வாரத்தை விட, குறைந்திருந்தது,'' என்றார்.பருத்தி ஏலம்
கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 525 மூட்டைகளை கொண்டு வந்தனர். பி.டி., ரகம், 100 கிலோ மூட்டை, 6,219 முதல், 7,519 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 10.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பி-டுகையில், மூட்டைக்கு, 50 ரூபாய் விலை குறைந்தது.