/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் ஆதிபராசக்தி கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலம்
/
சேலம் ஆதிபராசக்தி கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலம்
சேலம் ஆதிபராசக்தி கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலம்
சேலம் ஆதிபராசக்தி கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலம்
ADDED : நவ 11, 2025 01:59 AM
சேலம், ஆதிபராசக்தி கோவில் கும்பாபி ேஷகத்தில், ஓம்சக்தி பராசக்தி கோஷங்களுடன் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
சேலம், ராமகிஷ்ணா சாலையில் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் மற்றும் கோவிலில் கும்பாபி ேஷக விழா நேற்று முன்தினம் கணபதி யாகத்துடன் துவங்கியது. அன்று மாலை முதல் கால யாக பூஜை மற்றும் கோபுர கலசங்கள் வைத்து அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள், யாகத்தில் வைத்து பூஜித்த புனிதநீர் கலசங்கள் மேள தாளங்கள் முழங்க, பக்தர்களால் ஊர்வலமாக கோவிலை சுற்றி வந்து, கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, ஓம்சக்தி பராசக்தி கோஷம் முழங்க அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

