/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று சேலம் - சென்னை விமான கட்டணம் உயர்வு
/
இன்று சேலம் - சென்னை விமான கட்டணம் உயர்வு
ADDED : டிச 22, 2024 03:26 AM
ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, பயணியர் விமா-னங்கள் இயக்கப்படுகின்றன.
அதில், 'உடான்' திட்டம் அல்-லாமல், சென்னைக்கு, 'இண்டிகோ' நிறுவனம், விமானத்தை இயக்கி வருகிறது. வார நாட்களில், 3,500 முதல், 4,000 ரூபாய் வரை கட்டணம் பெற்று இயக்கப்படுகிறது. வார இறுதி, பண்-டிகை நாட்களில் அக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி ஞாயிறான இன்று, சேலம் - சென்னை இடையே, டிக்கெட் கட்டணம், 7,121 ரூபாயாக உயர்த்தப்பட்டு, இண்டிகோ நிறுவன வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் சில நாட்களுக்கு, 4,500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்-பட்டுள்ளது. இக்கட்டணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்-டாட்டத்தின்போது மேலும் அதிகரிக்கப்படும் என, அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.