/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாநகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
/
சேலம் மாநகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
சேலம் மாநகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
சேலம் மாநகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
ADDED : செப் 28, 2024 01:16 AM
சேலம் மாநகராட்சி கூட்டம்
கவுன்சிலர்கள் காரசார விவாதம்
சேலம், செப். 28-
சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று, மேயர் ராமசந்திரன் தலைமையில் நடந்தது. கமிஷனர் ரஞ்சித் சிங் முன்னிலை வகித்தார். துணை மேயர் சாரதா தேவி மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விபரம்:
பெளமிகா தப்சிரா
(தி.மு.க.,):, திருமணி முத்தாற்றை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தேள், பூரான், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் படையெடுக்கிறது.
செல்வராஜ் (அ.தி.மு.க.,): டவுன் பகுதியில், அந்தந்த மண்டலத்திற்கு அந்த பகுதியிலேயே பிளான் அப்ரூவல் வழங்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் ரூ.538 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. 220 கோடி மத்திய அரசு மானியமாக வழங்கவுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இவர்கள் பொக்லைன் மூலம் தார் சாலையை உடைத்து செல்வதால் பல கோடி ரூபாய் முறைகேடு நடக்கிறது. சேலம் மாநகரை பொருத்தவரை பாதாள சாக்கடை திட்டம் தோல்வி அடைந்த திட்டமாகும்.
கோபால் (தி.மு.க.,); அம்பாள் ஏரியில் சாக்கடை கழிவு, மனித கழிவு கலப்பதால் ஏரி நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக சீர் செய்து கழிவுநீர், மனித கழிவு கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இமயவர்மன் (வி.சி.க.,): நமக்கு நாமே திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும், கட்டட அனுமதிக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குகின்றனர். இதை தடுக்க வேண்டும்.
அம்சா (தி.மு.க.,):எங்கள் வார்டு பகுதியில் இரண்டு தெருக்களில் சிமென்ட் சாலை போடப்பட்டு ஓராண்டிலேயே குண்டும் குழியுமாக உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளுக்கு, பதிலளித்த மாநகராட்சி கமிஷனர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே, மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி மற்றும் அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து யாதவமூர்த்தி கூறுகையில்,'' ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் மாநகராட்சியில், 1,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட எந்த பணிகளும் முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது,'' என்றார்.