ADDED : ஜூன் 24, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கனககிரி ஊராட்சி, காகாபாளையத்தில் பள்ளி கட்டடம், மகுடஞ்சாவடி அருகே மகுடஞ்சாவடி- அத்தனுார் சாலை, பாட்டப்பன் கோவில் சாலை, தப்பகுட்டை ஊராட்சியில் பெருமாகவுண்டம்பட்டி வரை செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் அனைத்து விதமான வளர்ச்சி பணிகளை, சேலம் மாவட்ட செயற்பொறியாளர் மாது ஆய்வு மேற்கொண்டார்.
மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் கேசவன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.